வகைப்படுத்தப்படாத

ஜார்கண்ட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

(UTV|INDIA)-இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள போடோம் பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். இவர்களில் 3 பேர் வீட்டின் உள்ள அறையில் தூக்குப்போட்டும், அடுத்த பிளாட்டில் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்திலும் பிணமாக கிடந்தனர். 6-வது நபர் மாடியில் இருந்து குதித்தும் உயிரை மாய்த்து உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர்கள் நடத்திய மளிகைக்கடையில் ரூ.50 லட்சம் கடன் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது’ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මාලඹේ – කොළඹ සැහැල්ලු දුම්රිය මාර්ගය සමාරම්භක උත්සවය අදයි

Rishad says “Muslim Ministers in no hurry to return”

Germany’s Ursula von der Leyen nominated to lead EU Commission