சூடான செய்திகள் 1

50 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினை நாட்டிற்குக் கொண்டுவந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹெரோயின் தொகை, சந்தேகநபரின் பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 186 கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாகிஸ்தான் லாகூரிலிருந்து இன்று முற்பகல் 7.30 அளவில் நாட்டிற்கு வந்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன