விளையாட்டு

ரஷ்யாவும் குரோஷியாவும்; காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு

(UTV|RUSSIA)-ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் ஸ்பெயினுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

 

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் வீதம் பெற்றதன் காரணமாக, வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கென மேலதிக நேரத்தை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.

 

 

இரண்டு அணிகளும் கோல்களைப் போடாததால் பெனால்டி அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் போது ஸ்பெயின் வீரர்கள் அடித்த இரண்டு பெனால்டி கோல்களை ரஷ்ய கோல் கீப்பர் தடுத்தார். இதனால், ரஷ்யா வெற்றி பெற்றது.

 

இதேவேளை, டென்மார்க் அணியுடன் நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் வெற்றி பெற்று குரோஷியாவும் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியும் பெனால்டி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

 

காலிறுதிச் சுற்றில் ரஷ்யாவுக்கும் – குரோஷியாவுக்கு;ம இடையிலான போட்டி எதிர்வரும் 7ம் திகதி சொச்சி நகரில் நடைபெறும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹர்பஜன்சிங் இடத்தினை பிடிக்க 4 வீரர்கள்

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனை