வகைப்படுத்தப்படாத

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA)-நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியது.

சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புற்று நோயில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி இதோ..

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே முக்கியம்

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்