வகைப்படுத்தப்படாத

பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்

(UTV|INDIA)-இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் அவரது வீதி பிரசார நடவடிக்கைகளை தடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவருடனான சந்திப்புகளுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் உயரிய சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்திற் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி முக்கியமாக இலக்கு வைக்கப்படுகிறார்.

அவருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்துவந்த போதும், தற்போது உருவாகியுள்ள நிலைமை பாரதூரமானது என்று, உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 8 பேர் உயிரிழப்பு

Four suspects held with 64g of Kerala cannabis

Rishad says “Muslim Ministers in no hurry to return”