வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் இன்று முதல்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது.

இதன்படி அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகரித்த வரியை அறவிடவுள்ளது.

முன்னதாக அலுமினியம் மற்றும் இரும்பு ஆகிய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் மற்றும் 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறவிட உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பதிலாகவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இதன்படி அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற மதுபான பொருட்கள், உந்துருளிகள் மற்றும் குடிபானங்கள் என்பவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் வரியை அறவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதித் திட்டங்கள்

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு-துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்…

West Indies beat Afghanistan by 23 runs