சூடான செய்திகள் 1

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

(UTV|COLOMBO)-நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட்  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவர் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார்.

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தல், இருதரப்பு ஒத்துழைப்பு, சூழல் சவால்கள், மற்றும் கடல் சார் தொழிற்றுறைகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அவதானம் செலுத்துவார் என நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது,
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் மீள்குடியேற்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வாழ்வாதார செயற்றிட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி பொதி செய்யும் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்