வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

(UTV|TUNISIA)-உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் நேற்று வெளியாகின. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணிகளில் மேற்கொண்டு 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

Rail commuters stranded due to train strike

Michael Jackson honoured on 10th anniversary of his death