சூடான செய்திகள் 1

அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை துப்பரவு செய்வதற்காக அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 8ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

 

கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் கடந்த காலப்பகுதிக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இது 70 சதவீத வீழ்ச்சியாகும் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார். எனினும் கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக புத்தளம், மட்டக்களப்பு,கல்முனை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் வாரத்திற்கு சுமார் 500 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு இயக்கத்தின் டொக்டர் திசேரா தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் அபுசாலி மரணமானார்

முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு