சூடான செய்திகள் 1

புகையிரத வேலை நிறுத்தம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

நாளை (31) வரையில் பணி நிறுத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித கூறினார்.

இந்நிலையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருக்கும் புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புகையிரத போக்குவரத்தில் இதுவரை தாமதங்கள் ஏற்படவில்லை என்று புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்