சூடான செய்திகள் 1வளைகுடா

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்

(UTV|COLOMBO)-இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்ஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

நேற்று (24) வௌ்ளை மாளிகையில் வைத்தே இவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளுக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

அவரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கான அனுமதியை பெற வௌ்ளை மாளிகையின் ஊடாக குறித்த பரிந்துரை அமெரிக்க செனட் சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதி கிடைக்கபெற்ற பிறகு தற்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப்பிற்கு பதிலாக அலய்னா பி. டெப்லிடஸ் நியமிக்கப்பட உள்ளார்.

2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் கேஷப் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம் – ரவி