சூடான செய்திகள் 1

வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஹம்பாந்தொட்டையில் வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தொட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ்தாக்கம் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

உடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கால்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

கட்சிகள் இரண்டும் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை  – பி.ஹெரிசன்