சூடான செய்திகள் 1

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்த பேருந்து கட்டண சீர்திருத்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்காததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் 15 முதல் 20 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சங்கம் இதற்கு முன்னர் கோரியிருந்தது.

இதேவேளை, நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதமாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயார்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்