சூடான செய்திகள் 1

பசிலின் மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை எதிர்வரும் 18ம் திகதி வரை பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகளான ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அண்மையில் சீல் துணி விவகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, கடந்த ஆட்சிக் காலத்தின் போது, அரச அதிகாரிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்ததாக நீதிமன்றத்தில் கருத்து வௌியிட்டார் எனவும் இதுபோன்ற கருத்துக்களை கூறும் நீதிபதியிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் தனது மனுவில் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தனக்கு எதிரான வழக்கை பிறிதொரு நீதிபதியிடம் மாற்ற உத்தரவிடுமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியைப் பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடனான சுமார் 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டதாக பஷிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

ஆளுங் கட்சியுடன் இணைந்துக் கொண்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்

பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்