வகைப்படுத்தப்படாத

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது

(UTV|AMERICA)-பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்துடன் தொடர்புடைய கேம்பிரிஜ் எனலிடிக்கா (Cambridge Analytica ) அரசியல் ஆலோசனை நிறுவனம் மூடப்படவுள்ளது.

இதற்கமைய அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தமது நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியல் வாடிக்கையாளர்களுக்கு தனியாரின் பிரத்தியேக தகவல்களை முறையற்ற விதத்தில் வழங்கியதாக குறித்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

87 மில்லியன் பேரின் தனிப்பட்ட தரவுகள், வினாடி வினா செயலியொன்றினூடாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தமது நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக Cambridge Analytica, தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்த தமது விசாரணை நடவடிக்கை தொடரும் என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இடம்பெற்ற முறைகேடு மீள நிகழாமை தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பேஸ்புக்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

Thehan and Oneli bag U16 single titles

யாழில் பஸ் மோதியதில் மாணவன் பலி: பிரதேசத்தில் பதற்றம்