சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று (24) கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது, கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் மற்றும் கட்சியின் பதவி நிலைகள் உருவாக்குதல் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் புதிய பதவி விபரங்களை முன்வைக்க வேண்டும் என்பதால், இன்று இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்பட உள்ளதாக அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

2030 ஆம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு – ஜனாதிபதி அநுர

editor

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்