சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்

(UTV|COLOMBO)-அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை பிரதமருக்கு கையளித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சித்தல் போன்ற அரசுக்கு எதிரான செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்

இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்