சூடான செய்திகள் 1

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.

அதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட 24 பேர் கடந்த 2017ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 3601 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2051 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது நூற்றுக்கு 24% ஆக உள்ளது.

காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று

காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி