சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து ஜனாஸா நலன்புரிச்சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகளை வழங்கி வைத்தார்.

(UTV|COLOMBO)-அனுராதபுர நலன்புரிச்சங்களுக்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து குடி  நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள  அலுவலகத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில்  இம்முறை பலாகல, கல்னேவ, கெக்கிராவ,  இப்பலோகம ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன, மத, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தனது இச்சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால் முடியுமான  சகல  உதவிகளையும் இறுதிவரை இச்சமூகத்திற்காய் செய்வேன் என இந்நிகவில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

அஸீம் கிலாப்தீன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பிலான குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதிக்கு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி இடையே சந்திப்பு