வகைப்படுத்தப்படாத

உடனடியாக எந்தவித விலை அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படாது-அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிக்க கோரி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் உடனடியாக எந்தவித விலை அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படாது என கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்பிற்கு அமையவே இந்த  சமையல் எரிவாயுவின் விலையின் ஏற்ற,இறக்கம் தீர்மானிக்கப்படுகின்றது.
குறிப்பாக இது தொடர்பில் அட்டவனையொன்றினை தயாரிக்கும் பணியினை வாழ்க்கைச் செலவு குழு தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயு என்பது மக்களின் அத்தியாவசிய  தேவையாகும்.

விலை அதிகரிப்பு தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துவருவது வழமையான நிகழ்வாகும்.

இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Postal workers to launch sick-leave protest

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

Royse Fernando’s bail application rejected