வகைப்படுத்தப்படாத

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|SYRIA)-சிரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குவாமிஷ்லி நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சிரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்திஷ் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நகரங்களை குர்திஷ் போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து சிரியா அரசு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் ஐ.எஸ். தீவிரவாதிகள், இந்த இரு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் குவாமிஷ்லி நகரில் நேற்று தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், மேலும் ஏழு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் இயங்கிவரும் பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் இந்நகரில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Suspect arrested while transporting 203kg of Kerala Ganja

உங்கள் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்…

Storm Reid to play Idris Elba’s daughter in ‘The Suicide Squad’