வகைப்படுத்தப்படாத

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார கைது

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரவு சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில் கல்கிஸ்ஸ பிரிவுக்கு பொறுப்பாகவும், மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பாக கடமையாற்றிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிரசன்ன நானயகார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு ஆளுனர் கலந்துறையாடல்

Michael Jackson honoured on 10th anniversary of his death

Landslides destroy 10 shops in Ginigathhena; one reported missing