வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை

(UTV| SAUDI ARABIA)-இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. இந்த அறிவிப்பை சவுதி அரேபிய கால்நடை இடர் மதிப்பீட்டுத்துறை அமைச்சக இயக்குனர் சனாத் அல்-ஹார்பி வெளியிட்டு உள்ளார்.

சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் கோழி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து இருவர் பலி!