வகைப்படுத்தப்படாத

கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளில் இணைத்துக் கொள்வதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள், நியாயமான காரணங்களை முன் வைக்காமால் தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பதற்கும், அரச அலுவலகங்கள் தேர்தல் கடமைகளுக்கு தேவையான வாகனங்களை வழங்காமல் இருப்பதற்கும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கடமைக்கு திரும்புவது அத்தியவசியமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் ஆகியவற்றில் இருந்து தேர்தல் கடமைகளில் இணைத்துக் கொள்ளவுள்ள வாகனங்களை, ஏற்கனவே திட்டமிட்டபடி அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் அந்த நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කොළඹ වරායේ ගොඩකළ භූමි ප්‍රමාණය කොළඹ දිස්ත්‍රික් පරිපාලන ඒකකයට

Navy apprehends Indian fishermen for poaching in Lankan waters

கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்து தவிக்கும் பெண்!