விளையாட்டு

இலங்கை அணி சகல துறைகளிலும் திறமை காட்டியுள்ளது – தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-இம்முறை சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தியதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் தொடக்கம் திட்டமிட்டு செயற்பட்டதால் வெற்றி சாத்தியப்பட்டதென்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுபையில் ,

இன்றைய தோல்வி பங்களாதேஷ் அணிக்கான அபாய மணியாகுமென்று அணியின் தலைவர் மஷ்ரஃபி மொர்த்தாஸா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் தமீம் இக்பால், ஷாக்கிப் அல்-ஹசன் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் ஆட்டமிழந்தால், நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடவேண்டியிருக்கும் என்று மொர்த்தாஸா தெரிவித்தார்.

பங்களாதேஷ் டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி பத்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள்- 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…