வகைப்படுத்தப்படாத

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை

(UTV|DAMBULLA)-ஒன்றரை வயது குழந்தையை தந்தையும், தந்தையின் தாயும் இணைந்து கொன்று புதைத்துள்ள சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய சிறு வயது யுவதிக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த யுவதியை திருமணம் செய்யாது தனது வீட்டிலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு ஒரு வயது கடந்த நிலையில், மடியில் வைத்திருந்த வேளையில் பறித்தெடுத்த கணவர் கழுத்தினை நெறித்து குழந்தையை கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் அவருடைய தாயும் இணைந்து குழந்தையை காட்டு பகுதியொன்றில் புதைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை யாரிடமாவது கூறினால் தன்னையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால், விரக்தியடைந்து அவர்களின் வீட்டுக்காவலில் வசித்து வந்த 17 வயதுடைய குறித்த யுவதி, நேற்றிரவு அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து தம்புள்ளை காவல் நிலையத்தினை அடைந்துள்ளார்.

இதன்பின்னரே குறித்த சம்பவத்தினை காவல் துறையினருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து தாயையும் குறித்த நபரையும் கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“The public must accept diversity” – Lakshman Kiriella

கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம்-அமைச்சர் மஹிந்த அமரவீர

Trump in North Korea: KCNA hails ‘amazing’ visit