வகைப்படுத்தப்படாத

மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

(UTV|COLOMBO)-மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை என்று நிதியமைச்சினால் திருத்தம் செய்யப்பட்டது.

அத்துடன் மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாகவும் நிதியமைச்சு கூறியது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த புதிய சட்டதிருத்தத்தை 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்வதாக ஜனாதிபதி கூறினார்.

அதேவேளை இந்த புதிய சட்ட திருத்தத்தை இரத்து செய்வதற்கு இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த இரண்டு சட்ட திருத்தங்களையும் இன்று (18) மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

BAR briefed on SOFA, MCC & Land Act

அரசின் அனுமதியுடன் கஞ்சா விற்பனை…

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்