வகைப்படுத்தப்படாத

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

கல்விச் சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை

Momoa leads Netflix’s “Sweet Girl” film