வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு எதிராக 30 உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்போவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் 30 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது இந்த விடயம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் இன்று காலை ஒன்று கூடினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Three suspects arrested for stealing iron from Hambantota Harbour

Navy Commander given service extension