வகைப்படுத்தப்படாத

பிரதேச செயலாளரை தாக்கிய நபருக்கு நேர்ந்த கதி!

(UTV|MATARA)-அகுரெஸ்ஸ பிரதேச செயலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற மற்றுமொரு நபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

அகுரெஸ்ஸ – ஹெனகம – ஒவிடிமுல்ல பிரதேசத்தில் வீதி கண்காணிப்புக்கு சென்ற போது உந்துருளியில் வந்த இருவர் நேற்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

இந்த தாக்குதலில் பிரதேச செயலாளர் பயணித்த கெப் ரக வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த அகுரெஸ்ஸ பிரதேச செயலாளர் சந்தன திலகரட்ன தற்போதைய நிலையில் அகுரெஸ்ஸ மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Husband sought over Lankan woman’s attempted murder in Cyprus

சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

செபஸ்தியன் குர்ஸ் பதவி நீக்கம்…