வகைப்படுத்தப்படாத

248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று

(UTV|COLOMBO)-இரண்டாம் கட்டமாக 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக் கோரல் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும், வேட்புமனு கையேற்புக்கான காலம், எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் முடிவகிறது.
இதனிடையே, 93 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேற்பு மனுக்கள் கடந்த 11ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்போது 6 அரசியல் கட்சிகளின் வேற்பு மனுக்கள் மற்றும் 2 சுயாதீன குழுக்களின் வேற்பு மனுக்கள் உள்ளிட்ட 13 வேற்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Iran nuclear deal: Government announces enrichment breach

Water cut for several areas on Friday

இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு