வகைப்படுத்தப்படாத

93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக் தாக்கல் நிறைவு

(UTV|COLOMBO)-93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க ஒரு மணித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என்பன் இன்றும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை, 93 குறித்த உள்ளாட்சி நிறுவனங்களுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்துவதங்கான நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.
இதற்கமைய, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் சார்பில் 557 கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

නිදහස්, සාමකාමී රටක් වෙනුවෙන් සියලු ජනතාව අතර භාෂා දැනුම ප්‍රවර්ධනය විය යුතුයි – ජනපති

Kylie finds true love

Ranjan Ramanayaka to meet the Prime Minister today