வகைப்படுத்தப்படாத

இரண்டாவது நாளாகவும் தொடரும் தொடரூந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இதன்காரணமாக நேற்று முதல் இதுவரை சுமார் 276 தொடரூந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இயந்திர உதவியாளர்களை இணைத்து கொள்வதற்கான முறைமையை உரிய வகையில் அமுல்படுத்தாமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகேவுடன் பேச்சுவார்தை ஒன்று நடாத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்தை வெற்றியளிக்காத நிலையில் தொடரூந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.
தங்களது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஜப்பானின் பல நகரங்களில் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் ஆர்ப்பாட்டம்

Petitions filed against Bill banning tuition classes on Sundays and Poya

அரசமுகாமைத்துவ பதவி III க்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி