விளையாட்டு

காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்

(UTV|INDIA)-டெல்லியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டியின் போது காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் ‘மாஸ்க்’ அணிந்து விளையாடினர். மேலும், இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இலங்கை அணி நிர்வாகம் கூறியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், காற்று மாசுபாடு விளையாட்டு வீரர்களின் உத்வேகம் மற்றும் செயல்பாட்டினை குலைத்து விடுகிறது. இது வெற்றி மற்றும் தோல்வியை மயிரிழையில் மாற்றி விடும்.

மழை, வெளிச்சம் குறைபாடு ஆகியவற்றை ஒரு போட்டிக்கு முக்கியமானதாக நீங்கள் கருதுகிறீர்களோ அதே போல, காற்று மாசையும் இனி கருத வேண்டும் என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பங்களாதேஷ் செல்லவது நகைப்புக்குரியது – பாகிஸ்தான்

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

மீளவும் மேத்யூஸ் களத்தில்