வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளனர்.

கட்சித் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கள தலைமையில் இன்று (27) முற்பகல் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அலரிமாளிகையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் சில யோசனைகளை முன்வைத்தனர்.

அந்த யோசனைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

வெனிசூலாவில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

212 Drunk drivers arrested within 24-hours

இரணைதீவு மக்கள் ஏ32 வீதியை மறித்துப் போராட்டம்