வகைப்படுத்தப்படாத

தொடரூந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-அளுத்கமவில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்துக்கு பயாகல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கல்லெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடரூந்து திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

தொடரூந்து திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க இதனை  தெரிவித்தார்.

 

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய தற்போது தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று மாலை 6 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்லெறி தாக்குதலினால் குறித்த தொடரூந்தின் தலைமை கட்டுப்பாட்டாளர் காயமடைந்து களுத்துறை – நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

“There is No Need For me to Apologize” – Ranjan Ramanayake [Video]

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம்

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை