வகைப்படுத்தப்படாத

வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

(UDHAYAM, COLOMBO) – கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

கடந்த 28ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணைமன்றில் 10 சாட்சியாளர்கள் சாட்சி வழங்கியுள்ள நிலையில், மேலும் 40 பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமான சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ம் திகதி வரையில் நடைபெறும்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான இந்த விசாரணைமன்றில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

Related posts

முதன் முறையாக காஷ்மீர் முஸ்லிம் பெண் விமானி ஆகிறார்

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27

Chief Justice summoned before COPE