வகைப்படுத்தப்படாத

சேருவில நீர்வழங்கல் திட்டம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – ஒருங்கிணைக்கப்பட்ட சேருவில நீர்வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய 3610 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் தேசிய நீர் வழங்கல் சபை மற்றும் உள்ளுர் வங்கிகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், துரைராஜசிங்கம், மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம்.நசீர், ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், ஆர்.எம். அன்வர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், கிழக்கு பிராந்திய பிரதி பொது முகாமையாளர் றசீட் உள்ளிட்ட உயரதிகாரிகள்,; பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Samuel L. Jackson joins the new “Saw”

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

கினிகத்தேனையில் குடியிருப்பு நிலம் தாழிறக்கம்