வகைப்படுத்தப்படாத

சைட்டம் மருத்துவ கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து கல்லூரிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றால் முதலீடு செய்ய ஒருவரும் முன்வர மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

ஏவ்வாறாயினும், நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

BAR briefed on SOFA, MCC & Land Act

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Former DIG Dharmasiri released on bail