வகைப்படுத்தப்படாத

இராணுவத்தினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் சுமார் 350 பேர் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு இரத்த வங்கியின் இரத்த இருப்பு அளவினை மீள்நிரப்பும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து 59, 64, 68 படைப் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு முன் பராமரிப்பு பிரிவு மற்றும் ஏனைய படையணியின் இராணுவ வீரர்களும் இரத்ததானம் செய்துள்ளனர்.

Related posts

அவரசகால சட்டத்திற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!