வகைப்படுத்தப்படாத

தொடர்ச்சியான கைது அதிருப்தியளிக்கிறது – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை அதிருப்தியளிப்பதாகவும், அது இலங்கையின் வழக்கமாக மாறிவிட்டதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதன்படி தற்போது 53 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமது நாட்டு கடற்றொழிலாளர்களை கைது செய்ய வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தினால் கோரப்படுகின்ற போதும், இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றமை அதிருப்தி அளிப்பதாக பழனிச்சாமி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்துக்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

India’s Vijay Shankar ruled out of World Cup with broken toe

பாம்புகள் மற்றும் எலிகளை உண்ணும் 25 வயது இளைஞர்..!

மும்பையில் கடும் மழை நீடிப்பு