வணிகம்

மருந்து வகை உற்பத்திக்கு 23 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டில் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்காக 23 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் இம்மாதம் 11 ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வருட இறுதிக்குள் நாட்டுக்கு தேவையான 73 சதவீதமான மருந்து வகைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கான தொழிற்சாலைகள் ஹொரணை, கொக்கல, கண்டி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் இரண்டாயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்.

Related posts

HNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு