வகைப்படுத்தப்படாத

நுவரெலியாவில் சட்டத்தரனிகள் பணிபகிஷ்கரிப்பு

(UDHAYAM, COLOMBO) – நுரெலியா மாவட்ட நீதிமன்ற சட்டத்தரனிகள் 06.07.2017 பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் கனிஷ்ட சட்டத்தரனியொருவர் இன்று நீதியதியாக கடமையாற்றுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக நுவரெலியா சட்டத்தரனிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரனி பீ.ராஜதுரை தெரிவித்தார்

நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரனிகள் பலர் இருக்கின்ற நிலையில் இன்று பதில் நீதவானாக கனிஷ்ட சட்டத்தரனியொருவரை கடமையாற்றுகின்றமையானது பெருத்தமற்றது  இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டத்துறையின் கொரவம் பாதிப்படைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

India set to re-attempt moon mission

ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

Several Muslim Parliamentarians accepts former Ministerial portfolios