வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் பிற்போடப்பட்டமைக்கான காரணம்

(UDHAYAM, COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மேற்கொள்ளவிருந்த போராட்டம் ஒருவார காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அதன் செயலாளர் ஹரித அலுத்கே இதனை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரியப்படுத்தினார்.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவுடன் இடம்பெற்று பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது டெங்கு நோய் பரவி வருகின்ற சூழ்நிலையில், மதத்தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

තලවකැලේ නගරයේ වෙළඳසැල් හදිසි පරීක්‍ෂාවකට

ஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

அலரிமாளிகையில் சசுநோதய