வகைப்படுத்தப்படாத

பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – பேராசிரியர் எம்.ஐ.எம். வஸீர், தமது பெறுமதியான இரசாயன நூல்கள் பலவற்றை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

இவர் சவூதி அரேபியா, தஹ்ரான் நகரில் மன்னர் பஹத் பெற்றோலிய, கணிய பல்கலைக்கழகத்தில் 35 ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.

தென் கிழக்குப் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் இவர் இந்த நூல்களை கையளித்தார். இதுதொடர்பான நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், இடம்பெற்றது.

Related posts

Samuel L. Jackson joins the new “Saw”

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

மாணவர்களை 6 மாதத்தினுள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க நடவடிக்கை