வகைப்படுத்தப்படாத

அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UDHAYAM, COLOMBO) – அஞ்சல் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஆலிம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 26 ஆம் திகதிமுதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் அஞ்சல்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களும் நாளைய தினம் சேவை விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

மின்சார சபை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று மதியம் இலங்கை மின்சார சபைக்கு முன்னாள் அவர்கள் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாகவும் மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

 

 

Related posts

Heavy rains in Japan cause deadly landslides and floods

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

நோயாளர்களுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு