வகைப்படுத்தப்படாத

எத்தகைய அரசியல் கட்சி அங்கத்தவர்களும் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் விஞ்ஞான கற்கை பீடத்திற்கு இரண்டாவது குழு விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

எத்தகைய அரசியல் கட்சி அங்கத்தவர்களுக்கும் இந்த கற்கைநெறிகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவங்களை பதிவாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் விஞ்ஞான கற்கைநெறி பீடம் , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகம் , டாலி ரோட் கொழும்பு 10 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஒழுக்கத்தை மதிக்கும் அரசியல் அனுபவமிக்க இளைஞர்களை உருவாக்குவது இந்த பீடத்தின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமை முதல் பாடசாலை மற்றும் பொது இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் இளைஞர் முன்னணியினால் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் முதலாவது வழிகாட்டல் நிறுவனம் கண்டியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படுமென்றும் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் ஒளிபரப்பு..

India halts space mission an hour before launch

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது