(UDHAYAM, COLOMBO) – விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஜய் 61’ திரைப்படத்தின் தலைப்பு ‘மெர்சல்’ என்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மெரசலாகியுள்ள நிலையில், விஜய்யின் அடுத்தத் திரைப்படம் பற்றிய முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
‘விஜய் 62’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல் உறுதிசெய்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘விஜய் 62’ படப்பிடிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
