வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்…

 

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை மது ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் கிஹான் ரணவக முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலன்னறுவை – மெரிகல பிரதேசத்தில் வைத்து, விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேலும் பல வழங்குகள் பதிவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில், மது ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவற்துறை அதிகாரி ஒருவர் மற்றும் குழந்தை ஒன்றும் பலியானதுடன் சிலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை

அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு

Lanka IOC revises fuel prices