வகைப்படுத்தப்படாத

கொள்கை ரீதியான அரசியல் தேவை -அமைச்சர் துமிந்த திசாநாயக்க

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு கொள்கை ரீதியான அரசியல் தேவையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உண்மையான மாற்றத்திற்கு அவளுக்கும் ஓர் பாதை என்ற தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் அமைச்சர் இந்த கருத்து வெளியிட்டார்.

இங்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உரையாற்றுகையில்,

கல்வி, சுகாதாரம் முதலான பல துறைகளில் பெண்கள் முன்னிலையில் திகழ்வதாக குறிப்பிட்டார். அரசியலில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் ஐந்து சதவீதத்திற்கு மேலானதாக காணப்படுகிறது. இது மாகாண சபைகளில் நான்கு சதவீதம் மாத்திரமே என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துசித்த விஜேமான ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

More rain in Sri Lanka likely

Unemployed graduates tear-gassed

சுவையான ஆரஞ்சு சாலட்